Product Summery
Author: Chetan Bhagat
paperback
₹ 250
₹ 275
அனைத்து இந்தியர்களுக்கும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். ஒரு கோடைக்கால மதிய நேரத்தில், உணவு டெலிவரி செய்யும் நபரான விராஜ், சேத்தன் என்ற எழுத்தாளருக்கு மதிய உணவு கொண்டு வருகிறார். அவர் தாமதமாக வந்ததோடு துயரத்தில் இருப்பதாகத் தெரிகிறது. என்ன விஷயம் என்று சேத்தன் கேட்க, விராஜ் அழத் தொடங்குகிறார். நா என் வாழ்க்கைய வெறுக்கிறேன். என் வேல போற போக்கு சரியில்ல. என் கேர்ள்ஃப்ரெண்ட் என்னை விட்டுட்டு போயிட்டா. எனக்கு ஃபியூச்சரே இல்ல' என்கிறார். எழுத்தாளர் விராஜுக்கு உதவ முன்வருகிறார். 'உனக்காக இதை நா சரி செய்ய முடியும். நா தினமும் லஞ்ச் ஆர்டர் செய்யறப்போ வா. டெய்லி, வாழ்க்கையப் பத்தி நா கத்துகிட்ட ஒரு இரகசியத்த உனக்கு நா சொல்றேன்.' வாழ்க்கைக்கான 11 விதிகளுக்கு வரவேற்கிறோம், இது தடைகள் எதையும் விட்டுவிடாமல் தகர்த்து உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் புத்தகம். அவரது தனிப்பட்ட புத்தகமாக இல்லாவிட்டாலும் கூட, சேத்தன் தனது தோல்விகள் மற்றும் வெற்றிகள், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் உச்சம் தொட்டவர்களுடனான அவரது பல உரையாடல்கள் மற்றும் இருபது ஆண்டுகளாக ஒரு பிரபலமான ஊக்கமளிக்கும் பேச்சாளர் போன்ற தனது அனுபவங்களிலிருந்து எழுதியிருக்கிறார். இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்களில் ஒருவராக சேத்தனை மாற்றியிருக்கும் ஒப்பற்ற பாணியில் எழுதப்பட்ட, ஊக்கமளிக்கும், எளிதாகப் படிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையாக பேசும் இந்த வழிகாட்டியானது இன்றைய தீவிரமான போட்டி நிறைந்த, நியாயமற்ற உலகில் வெற்றிபெறுவதற்கு உங்கள் மூளையை மாற்றியமைக்க உதவும். உங்கள் சிறந்த வாழ்க்கையை வாழத் தயாரா? ஒரு புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்றால், அது இதுதான்.